காஸாவில் மையவாடி அழிப்பு; உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு புல்டோசர்களால் நசுக்கப்பட்டன: இஸ்ரேலின் கொடூரம்

🕔 December 21, 2023

கிழக்கு காஸாவில் அஸ் – சஹா பகுதியில் உள்ள ஷேக் ஷபான் மையவாடியை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் புல்டோசர்களைக் கொண்டு அழித்துள்ளன.

இதன்போது இறந்தவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு புல்டோசர்களால் நசுக்கப்பட்டன. இதன் காரணமாக அடக்கம் செய்யப்பட்ட பல உடல்கள் – வெளியே எடுக்கப்பட்ட நிலையில், மையவாடி முழுவதும் காணப்படுகின்றன.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் மையவாடிகளை புல்டோசர்களால் அழிப்பதும், இறந்த உடல்களை தோண்டி எடுப்பதும், பின்னர் அவற்றை சிதைப்பதும் இது முதன்முறையல்ல என்று, அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

குழந்தைகள் உட்பட இறந்த உடல்களின் பாகங்கள் மையவாடியில் காணப்படுகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்