ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே எகிப்தில்: போர் நிறுத்த பேச்சுக்கான சாத்தியம் உள்ளதாக அல் ஜசீரா தகவல்

🕔 December 20, 2023
ரஃபாவில் இஸ்ரேலிய தாக்குதல் நடந்த இடத்தை பாலஸ்தீனியர்கள்

டக்கு காஸாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர் என்று, காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மறுபுறமாக தெற்கு காஸாவின் ரஃபாவில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றின் அருகே உள்ள குடியிருப்பு கட்டிடத்தை வான் வழியாக இஸ்ரேஸ் தாக்கியது. இதன்போது அல் ஜசீரா ஊடகவியலாளர்கள் அருகில் இருந்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே எகிப்தின் கெய்ரோவில் இருக்கிறார் என, அல் ஜசீரா தெரிவித்துள்ளது. இது சாத்தியமான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் புதிய கட்டத்தை வெளிப்படுத்துவதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

ஒக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 19,667 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்