அலி சப்ரியை நீதியமைச்சராக நியமிப்பதற்கு எதிர்புத் தெரிவித்தேன்: பேராயர் மெல்கம் ரஞ்சித் உண்மை ஏற்றுக் கொண்டார்

🕔 December 20, 2023

லி சப்ரியை கடந்த அரசாங்கத்தில் நீதி அமைச்சராக நியமிப்பதற்கு, தான் எதிர்ப்பு வெளியிட்டதாக பேராயர் கர்தினால் ரஞ்சித் தெரிவித்தார்.

ஊடகவியலாாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பேராயர்; 2019 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை – நீதி அமைச்சின் கீழ் வரும் என்பதை மனதில் வைத்து, அலி சப்ரியின் நியமனத்துக்கு ஆட்சேபனைகளை எழுப்பியதாக விளக்கமளித்தார்.

அலி சப்ரியின் இனம் அல்லது மதத்தின் அடிப்படையில் மாத்திரமன்றி ஏனைய காரணிகளின் அடிப்படையிலும் – அந்த எதிர்ப்பை அவர் வெளியிட்டதாக விளக்கமளித்தார்.

இருந்தபோதிலும் அலி சப்ரியை வெளிவிவகார அமைச்சராக நியமிப்பதற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் பேராயர் குறிப்பிட்டார்.

“அலி சப்ரி நீதி அமைச்சராக நியமிக்கப்படுவதை நாங்கள் எதிர்த்தோம். ஒரு முக்கிய பௌத்த பிக்கு இந்த நியமனம் பற்றி எனக்கு அறிவித்து – இது நல்ல நடவடிக்கையா என விசாரித்தார். இதன் அடிப்படையிலேயே நான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தேன்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் ஒரு குறிப்பிட்ட மதக்குழுவினரால் நடத்தப்பட்டதாக கருதப்பட்டதால், அலி சப்ரி அதே மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்பட்டதால், நியமனம் குறித்து ஆரம்பத்தில் கவலைகள் எழுப்பப்பட்டன.

“இது ஈஸ்டர் தாக்குதல்கள் மீதான சுயாதீன விசாரணையை பாதிக்கும் என்று நாங்கள் கவலைப்பட்டோம்” என்றும் அவர் கூறினார்.

எனினும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் வேறொரு சதி இருப்பதாக தெரியவந்ததையடுத்து, தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக பேராயர் ஏற்றுக்கொண்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, அவரை தொலைபேசியில் அழைத்த பேராயர் மெல்கம் ரஞ்சித், அலி சப்ரியை நீதியமைச்சராக நியமிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார் என, அண்மையில் உதய கம்மன்பில எம்.பி நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: கோட்டாவை தொலைபேசியில் அழைத்த கர்தினால் மெல்கம் ரஞ்சித்: உண்மையை உடைத்தார் உதய கம்மன்பில

Comments

புதிது பேஸ்புக் பக்கம்