இன்னொரு போர் இடைநிறுத்தத்துக்கு தயார்: இஸ்ரேல் ஜனாதிபதி தெரிவிப்பு

🕔 December 19, 2023

ன்னொரு மனிதாபிமான போர் இடைநிறுத்தத்துக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், மேலதிக மனிதாபிமான உதவிக்கும் இஸ்ரேல் தயாராக உள்ளதுஎன்று அந்த நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார்.

தூதர்களின் கூட்டத்தில் இந்த விடயங்களை அவர் கூறியதாக அவரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதற்கான பொறுப்பு முழுவதுமாக (ஹமாஸ் தலைவர்) யாஹ்யா சின்வர் மற்றும் (பிற) ஹமாஸ் தலைமையிடம் உள்ளதுஎன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, இஸ்ரேல்ஹமாஸ் தரப்புக்களிடையே 07 நாட்கள் போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இரு தரப்பிலிருந்தும் கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

ஒக்டோபர் மாதத்திலிருந்து இதுவரை இஸ்ரேலிய தாக்குதலில் 19,667 பலஸ்தீனர்களகொல்லப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்