இணையவெளி சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இவ்வருடம் 98 ஆயிரம் வழக்குகள் பதிவு

🕔 December 19, 2023

ணையவெளி மூலம் நடைபெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 98,000 வழக்குகள் 2023 ஆம் ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ளதாக, பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்தார்.

2022 இல் பதிவாகியிருந்த 1,46,000 சிறுவர் துஷ்பிரயோக வழக்கு எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், இது குறைவாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (19) தவவல வெளியிட்ட அவர், ‘காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான சர்வதேச மையம்’ எனும் அமைப்பின் மூலம் மேற்படி வழக்குகள் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு சமூக ஊடக தளங்களில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வெளிப்படையான வீடியோக்கள் மற்றும் உள்ளடக்கம் பரவுவதை, தொடர்புடைய நிறுவனங்களின் தரவுத்தளங்கள் மூலம் கண்காணிக்கவும், தகவல்களைப் பகிரவும் முடியும் என்றும் அவர் கூறினார்.

வெளிநாடுகளுடன் இத்தகைய தகவல்களைப் பகிர்ந்துகொள்வதைத் தவிர, இலங்கையும் பிற நாடுகளிடமிருந்து இதுபோன்ற உதவிக்குறிப்புகளைப் பெற்றுள்ளதாகவும், இது சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களை சமாளிக்க உதவுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்