பொதுஜன பெரமுனவின் நிருவாகிகள் நியமிக்கப்பட்ட போதும், தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடம்: காரணத்தை வெளியிட்டார் நாமல் ராஜபக்ஷ
ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று (16) நியமிக்கப்பட்ட போதிலும், தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைத்துள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய அமைப்பாளர் பதவியை பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்தப் பதவி வெற்றிடமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்சியியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடிய கட்சியின் செயற்குழு இந்த தீர்மானங்களை எடுத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மீண்டும் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் புதிய பொருளாளர் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் தவிசாளராக உத்துராவல தம்மரதன தேரர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பிரதி தேசிய அமைப்பாளர் பதவிகளும் இம்முறை உருவாக்கப்பட்டன. இந்த பதவிகளுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களில் இருந்து நபர்களை கட்சி பின்னர் தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் தேசிய மாநாடு நேற்று நடைபெற்ற போது, தலைவராக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஏகமனதாக தெரிவானார்.