50 வயதுப் பெண்ணிடம் 07 கிலோ தங்கம்; யாழ்ப்பாணத்தில் கைது

🕔 February 2, 2016

Gold buscuits - 011
ழு கிலோ எடையுடைய தங்க பிஸ்கட்களுடன் யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கானை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் வைத்து, பெண்ணொருவர் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார்.

சாவகச்சேரியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். இவர் இன்று அதிகாலை 4.00 மணியளவில் வேன் ஒன்றில் வந்தபோது கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்குக் கிடைத்த தகலொன்றின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த விசேட குழுவொன்று இந்தக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டது.

கைது செய்பட்பட்ட பெண்ணிடம் இருந்து 70 தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு தங்க பிஸ்கட்டும் தலா 05 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் பெறுமதிமதியுடையவை எனக் கூறப்படுகிறது.

அந்தவகையில், கைப்பற்றப்பட்ட மொத்த தங்கத்தின் பெறுமதி 03 கோடியே 93 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்