சரத் பொன்சேகா, தேசிய படைவீரர்கள் நலன்புரி அமைச்சராகிறார்?

🕔 February 2, 2016

Ranil + SF - 087க்கிய தேசிய கட்சிக்கும் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சிக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று, நாளை அலரி மாளிகையில் கைச்சாத்திட்படவுள்ளது.

இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் மற்றும் ஜனநாயக கட்சித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில், மறைந்த அமைச்சர் எம.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகுிறது.

சரத்பொன்சேகாவுக்கு தேசிய படைவீரர்கள் நலன்புரி அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்