கவனம்: டெங்கு நோயாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு

🕔 December 11, 2023

ந்த வருடத்தில் இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐ தாண்டியுள்ளது என, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 10ஆம் திகதிய நிலவரப்படி இந்த வருடத்தில் 80,192 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 3,704 பேர் டிசம்பர் மாதத்தில் மட்டும் பதிவாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் தெரிவித்துள்ளது.

டெங்கு நோயினால் மேல் மாகாணம் மிகவும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 46.4% என பதிவாகியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்