கல்முனை பிராந்தியத்தில் சுகாதாரப் பணிப்பாளராக கடமையாற்றிய டொக்டர் றிபாஸ், அம்பாறையில் பிரதிப் பணிப்பாளராக கடமையைப் பொறுப்பேற்றார்

🕔 December 8, 2023

– முன்ஸிப் அஹமட் –

ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றி வந்த டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், நேற்று (07) அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் பிரதிப் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவருக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டிருந்த போதும், அதனை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிப்புச் செய்து வந்தார்.

இந்த நிலையில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்திலிருந்து டொக்டர் றிபாஸ் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, நேற்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்தப் பணிப்புறக்கணிப்பை ஏற்பாடு செய்திருந்தது.

இது இவ்வாறிருக்க, வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு அமைவாக, அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில், கடந்த 06ஆம் திகதியன்று – பிரதிப் பணிப்பாளராக கடமையைப் பொறுப்பேற்குமாறு, டொக்டர் றிபாஸுக்கு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டி.ஜி.எம் கொஸ்தா கடிதம் மூலம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் இடமாறிச் சென்றமையினை அடுத்து, டொக்டர் சஹீலா இஸ்ஸதீன் – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

தொடர்பான செய்தி: இடமாற்றம் வழங்கப்பட்டும், போக மறுக்கிறார்: கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வெளியேறுமாறு வலியுறுத்தி வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்