நபரொருவரை அடித்துக் கொலை செய்த வழக்கு: இருவருக்கு மரண தண்டனை

🕔 December 5, 2023

பரொருவரை 2010 ஆம் ஆண்டு தாக்கி கொலை செய்த வழக்கில் – மத்திய மாகாண மேல் நீதிமன்றம் இருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கண்டி குருபெத்த பகுதியைச் சேர்ந்த சமன் குமார திசாநாயக்க மற்றும் சமரகோன் பண்டார விஜேகோன் ஆகிய இருவர் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி சுமுது பிரேமச்சந்திர, குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க அரசு தரப்பால் முடிந்துள்ளதாக தெரிவித்தார்.

கண்டி – கந்தே ஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்த சாமி ஐயா தன பாலசிங்கம் என்ற நபரை 2010ஆம் ஆண்டு தலை மற்றும் வயிற்றில் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், மேற்படி இருவருக்கும் எதிராக, மத்திய மாகாண மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சாட்சிகளின் எண்ணிக்கை 14 எனவும் அவர்களில் 07 பேர் நேரில் கண்ட சாட்சிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்