‘ஸ்மார்ட் ஆணுறை விற்பனை நிலைங்கள்’ மீண்டும் புழக்கத்துக்கு வருகின்றன

🕔 November 30, 2023

பொதுமக்கள் ஆணுறைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, ‘ஆணுறை விற்பனை இயந்திரங்கள்’ பொது இடங்களில் நிறுவப்படவுள்ளதாக. தேசிய பாலியல் நோய்கள்/எய்ட்ஸ் கட்டுப்பாடு கூறுகிறது. திட்டம் தெரிவித்துள்ளது.

எச்ஐவி/எயிட்ஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன விளக்கமளித்துள்ளார்.

பொது இடங்களில் ‘ஸ்மார்ட் ஆணுறை விற்பனை இயந்திரங்களை’ நிறுவும் திட்டம் 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, இருப்பினும், பொருளாதார நெருக்கடியின் விளைவாக திட்டம் நிறுத்தப்பட்டது.

கடந்த 09 மாதங்களாக ஆணுறைகளுக்கு தட்டுப்பாடு நிலவிய போதிலும், கடந்த வாரம் மொத்தம் 02 மில்லியன் ஆணுறைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதனால், தற்போது கிளினிக்குகள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நாளை டிசம்பர் 01ஆம் திகதி உலக எயிட்ஸ் தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments