ரூபவாஹினி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் ஆகியவற்றை பொது நிறுவனமாக இணைக்கத் தீர்மானம்

🕔 November 29, 2023

ரசுக்குச் சொந்தமான ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபானம் ஆகியவற்றை இணைத்து பொது நிறுவனமாக மாற்றப்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தொடர்ச்சியாக நட்டத்தை சந்தித்து வரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் என்பன – பொது நிறுவனமாக மாற்றப்படும் என ஊடகத்துறை அமைச்சின் ஆலோசனைக் குழுவில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்களை முன்வைத்த குழுவின் தலைவர் பந்துல குணவர்தன, இந்த இரண்டு நிறுவனங்களும் எவ்வாறு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை சுட்டிக்காட்டினார்.

அதன்படி, 2023ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 277 மில்லியன் ரூபாய் நட்டத்தையும், 2023ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 457 மில்லியன் ரூபா நட்டத்தையும் சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த அலைவரிசைகளுக்கான நிதியை திறைசேரி வழங்குவது கடினம் என சுட்டிக்காட்டிய அமைச்சர், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தை பொது நிறுவனமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்படி, இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்