ஒல்லாந்தர் கொள்ளையடித்துச் சென்ற கலைப்பொருட்கள், இலங்கையிடம் மீளவும் கையளிப்பு

🕔 November 29, 2023

லங்கையிலிருந்து ஒல்லாந்தர் (நெதர்லாந்து) காலனித்துவக் காலத்தில் கொள்ளையடித்துச் சென்ற 06 கலைப் பொருட்களை மீண்டும் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

பீரங்கி, தங்க வாள், வெள்ளி வாள், சிங்களக் கத்தி மற்றும் இரண்டு துப்பாக்கிகள் ஆகிய 6 வரலாற்றுப் பொருள்களை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இன்று (29) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைபவ ரீதியாக ஏற்றுக்கொண்டார்.

இந்த பொருட்கள் டிசம்பர் 05 ஆம் திகதி முதல் கொழும்பிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என நெதர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.

தொடர்பான செய்தி: ஒல்லாந்தர் கொண்டு சென்ற பண்டைய பொருட்கள் இலங்கைக்கு மீண்டும் கிடைக்கின்றன: ஒப்பந்தம் கைச்சாத்து

Comments

புதிது பேஸ்புக் பக்கம்