காஸாவில் போர் நிறுத்தம் இன்று நிறைவுக்கு வருகிறது: தொடர்வதற்கு நெதன்யாஹு நிபந்தனை விதிப்பு

🕔 November 27, 2023

மாஸ் – இஸ்ரேல் இடையிலான நான்கு நாள் போர் நிறுத்தம் இன்று திங்கட்கிழமை நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலும் கைதிகளை ஹமாஸ் விடுவிக்குமானால், காஸாவில் போர் நிறுத்தத்தை நீடிக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் திங்கள்கிழமை முடிவடையும் நான்கு நாள் போர் நிறுத்தத்தை நீடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றன.

இதேவேளை ஹமாஸ் விடுவிக்கும் 10 கைதிகளுக்கு – தலா ஒரு நாள் போர் நிறுத்தத்தை நீடிக்கப்படும் என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, அமெரிக்க ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, காஸாவில் நடந்த சம்பவங்கள் இனப்படுகொலைக்கான சட்ட வரையறையின் எல்லைக்குள் இருப்பதாக ஜோர்டான் வெளிவிவகார அமைச்சர் அய்மன் சஃபாடி கூறியுள்ளார்.

பார்சிலோனாவில் நடைபெற்ற மத்திய தரைக்கடல் உச்சிமாநாட்டிற்கான யூனியனில் நடந்த செய்தி மாநாட்டில் பேசிய அவர், போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

மறுபுறமாக, காஸாவின் முன்னரங்குக்குச் சென்று அங்குள்ள இஸ்ரேல் படையினரைச் சந்தித்த நெதன்யாஹு, “எங்களை எதுவும் தடுக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்