பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ரொஷான் ரணசிங்க: ஹரீனிடம் செல்கிறதா விளையாட்டுத்துறை?
விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க – பதவி நீக்கப்பட்டமையை அடுத்து, புதிய அமைச்சராக ஹரீன் பெனாண்டோ நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக ரொஷான் ரணசிங்க எடுத்த தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாக எழுந்த சர்ச்சைகளையடுத்து, அவரை – இன்று (27) அமைச்சுப் பதவியிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீக்கினார்.
இதனை அடுத்து அவருக்கு பதிலாக – விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரீன் பெனாண்டோ நியமிக்கப்படலாம் என வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரொஷான் ரணசிங்க – வகித்து வந்த நீர்ப்பாசனம், இளைஞர் விவகாரம் ஆகிய அமைச்சுப் பதவிகளும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன.