35 கோடி ரூபாய் பெறுமதியான மருந்து, வைத்திய உபகரணங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்

🕔 November 26, 2023

350 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள், அறுவை சிகிச்சை மற்றும் ஆய்வக உபகரணங்கள் பழுதடைந்தமையின் காரணமாக, பயன்பாட்டிலிருந்து திரும்பப் பெறப்பட்டன.

அரச வைத்தியசாலைகளன் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டிருந்த மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், ஆய்வக உபகரணங்கள் பழுந்தடைந்தமையின் காரணமாக அவை கைவிடப்பட்டன. இவற்றின் பெறுமதி 349 மில்லியன் ரூபாயாகும் என, கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

சில மருந்துகள் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படுவதற்கு முன்னர், எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைச் சரிபார்க்க – இடைநிலை வழங்கல் பிரிவில் தற்போதுள்ள பொறிமுறைமை இல்லாததால், அத்தகைய குறைபாடுகள் மிகவும் பிற்பகுதியில் கண்டறியப்படுகின்றன என்று தொடர்புடைய ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க 2022 ஆம் ஆண்டின் இறுதியில், நாட்டில் 1,331 மருத்துவர்கள், 77 பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், 2,034 தாதி உத்தியோகத்தர்கள், 136 மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், 68 தொழில்சார் சிகிச்சையாளர்கள் (occupational therapists), 126 மருந்தாளர்கள் மற்றும் 270 கணக்காய்வாளர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளதாகவும் கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேதிலக நேரக் கொடுப்பனவு மற்றும் விடுமுறை ஊதியங்களை வழங்குவதற்காக 36,192 மில்லியன் ரூபா செலவிடப்படுள்ளதாகவும், அது மொத்த ஊதியத்தில் 72% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்