தையல் பயிற்சியை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

🕔 June 2, 2015

Libya - 01– அஸ்ரப் ஏ. சமத் –

உலக சர்வதேச அழைப்பு லிபிய சங்கத்தின் நிதியுதவியின் கீழ், தையல் பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த  – கொழும்பைச் சேர்ந்த 30 பெண்களுக்கு, சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெற்றது

உலக சர்வதேச அழைப்பு லிபிய சங்கத்தின் நிதியுதவியுடன் சிங்கர் நிறுவனத்தினூடாக, மேற்படி பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.

உலக சர்வதேச அழைப்புச் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் மௌலவி நவாஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், லிபிய தூதுவரலாயத்தைச் சேர்ந்த  சார்ஜ் டி அபயார்ஸ் கமல் பில் அஸ்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

பயிற்சினை முடித்தோருக்கான சான்றிதழ்களை ஜாமியா நளீமியாவின் சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ்ஷேக்  உசாமா, கபூரியா அரபுக் கல்லூரி அதிபர் ஏ.ஆர். மஹ்ரூப் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

இதேவேளை, தையல் பயிற்ச்சியினை நிறைவு செய்தவார்களால், தயாரிக்கப்பட்ட உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் இங்கு இடம்பெற்றது.

லிபிய தேசம் – கடந்த சில வருடங்களாக யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட போதிலும், இலங்கையில் வாழும் இளைஞர் யுவதிகள் – தொழில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான நிதியுதவியிகளை  வழங்குவதை  இடைநிறுத்தவில்லை என்பது  இங்கு குறிப்பிடத்தக்கது.

உலக சர்வதேச அழைப்பு லிபிய சங்கமானது, கடந்த 10 வருடகாலமாக – இலங்கை இளைஞர்  யுவதிகளுக்காக  பல்வேறு பயிற்சிநெறிகளை இலவசமாக நடாத்தி வருகின்றது.

ஏற்கனவே அரபு, கணிணி, பாலர் பாடசாலை ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் தையல் பயிற்சி போன்றவற்றினை  கொழும்பில் தொடர்ந்தும் நடர்ததி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. Libya - 02Libya - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்