மருதமுனையில் நடைபெற்ற ஈமானிய எழுச்சி மாநாடு

🕔 January 31, 2016

Islamic event - Maruthamunai - 03– றிசாத் ஏ காதர் –

ம்பாறை பிராந்திய ‘ஈமானிய எழுச்சி’ மாநாடு நேற்று சனிக்கிழமை மருதமுனை மஸ்ஜிதுல் அக்பர் பள்ளிவாசலில்நடைபெற்றது.

றாபிதது அஹ்லிஸ் ஸூன்னா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வுக்கு, அவ் அமைப்பின் அம்பாறை பிராந்திய செயலாளர் அஷ்ஷேஹ் றியாழ் (காசிபி) தலைமை தாங்கினார்.

‘அல்குர்ஆனையும் அல்-ஹதீஸையும் புரிந்துகொள்வது எப்படி’ என்கின்ற தலைப்பில் றாபிதது அஹ்லிஸ் ஸூன்னா அமைப்பின் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழக சுதேச மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான டாக்டர் அஷ்ஷேஹ் ரயிஸூத்தீன் (ஸரயி) இந் நிகழ்வில் உரை நிகழ்த்தினார்.

அதேவேளை, ‘சீதனமும் அதை ஒழிப்பதற்கான வழிவகைகளும்’ என்ற தலைப்பில் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியாவின் பணிப்பாளர் அஷ்ஷேஹ் அபூபக்கர் சித்தீக் (மதனி) சொற்பொழிவாற்றினார்.

நிகழ்வின் கருப்பொருளான ‘ஈமானிய எழுச்சி’ என்ற தலைப்பில், தாருல் ஹூதா பெண்கள் அரபுக்கல்லூரியின் அதிபர் அஷ்ஷேஹ் கலாநிதி முபாறக் மதனி உரையாற்றினார்.

‘இல்லற வாழ்வு நல்லறமாக அமைய’ என்ற தலைப்பில் தாருல் ஹூதா பெண்கள் அரபுக்கல்லூரியின் விரிவுரையாளர் இத்ரீஸ் ஹசன் (ஸஹ்வி) மற்றும் ‘பிழையாக புரிந்துகொள்ளப்படும் தவ்ஹீத் கலிமா’ என்கின்ற தலைப்பில் அஷ்ஷேஹ் மன்சூர் மதனி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

இந் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்குபற்றினர்.Islamic event - Maruthamunai - 01Islamic event - Maruthamunai - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்