லஞ்சம் பெற முயற்சித்த போது கைதான மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவருக்கு பிணை

🕔 November 13, 2023

ஞ்சமாக 10 மில்லியன் ரூபாயை பெற முற்பட்ட போது – கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர்  சுபுன் ஷஷேந்திர பத்திரகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 25,000 ரூபாய் ரொக்க பிணையிலும், 25 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் அவருடன் கைது செய்யப்பட்ட ஏனைய இருவரும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (13) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் ஷஷேந்திர பத்திரகே உட்பட மூவரும் லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கடந்த 10 ஆம் திகதி  கைது செய்யப்பட்டனர்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வேலைத்திட்டம் ஒன்றுக்காக 10 மில்லியன் ரூபாய் லஞ்சமாக பெற முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட மூவரும் இன்று 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

தொடர்பான செய்தி: 10 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற முயன்ற போது கைதான, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்கு விளக்க மறியல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்