காஸாவிலுள்ள அல் – ஷிபா வைத்தியசாலையுடனான தொடர்பாடல் இழப்பு; 37 குறைமாதக் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான நோயாளர் நிலை மோசம்: உலக சுகாதார ஸ்தாபனம் கவலை

🕔 November 12, 2023

காஸாவில் உள்ள மிகப்பெரிய வைத்தியசாலையான அல் – ஷிஃபாவுடன் தொடர்பாடலை இழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையைச் சுற்றி இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதால், காஸா நகரம் மற்றும் வடக்கு காசாவில் உள்ள பல வைத்தியசாலைகள் ‘நேரடியாக’ பாதிக்கப்பட்டுள்ளன என்று, ஐ.நா கூறியுள்ளது.

வைத்தியசாலைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அல்-ஷிஃபா மருத்துவமனையில் 37 குறைமாத குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான நோயாளிகள் அச்ச சூழ்நிலையில் உள்ளனர்.

இந்தந நிலையில் காஸாவில் உடனடி போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் பாரிய மக்கள் பேரணிகள் நியூயோர்க், லண்டன், பரிஸ், பக்தாத், கராச்சி, பெர்லின் மற்றும் எடின்பர்க் உட்பட உலகெங்கிலும் உள்ள நகரங்களில் நடத்தப்பட்டன.

இஸ்ரேல் – டெல் அவிவ் நகரில் ஹமாஸிடமிருக்கும் கைதிகளை விடுவிக்குமாறு கோரி, இஸ்ரேலியர்கள் ஒன்று கூடினர்.

ஒக்டோபர் 7 முதல் காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 11,078 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை பல வைத்தியசாலைகள் தொடர்பாடலை இழந்ததால், இந்த புள்ளிவிவரங்கள் சமீபத்தியதாக இருக்காது என்றும், காஸா சுகாதார அமைச்சின் புதிய தகவல்களை இந்த நிலைமை தாமதப்படுத்தியுள்ளதாகவும் ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்