பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, கப்பம் கோரியவர் கைது

🕔 November 12, 2023

லங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலைமிரட்டல் விடுத்து 1.5 மில்லியன் ரூபாய் கப்பம் கோரிய பிரதான சந்தேகநபர் – வெல்லம்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்போது போது 12 கிராம் ஐஸ் போதைப்பொருள் அவரிடம் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ், ஜனக ரத்நாயக்கவுக்கு எதிரான கொலை மிரட்டல்கள் மற்றும் கப்பம் பெற முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முன்னதாக ஜனக ரத்நாயக்க கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தார். அதில் தன்னை படுகொலை செய்வதற்கான ஒப்பந்தம் பெற்றதாக கூறிய நபர் ஒருவரிடமிருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், தன்னைக் கொல்லாமல் விடுவதென்றால் அவருக்கு 1.5 மில்லியன் ரூபாய் பணம் வழங்குமாறு அவர் கோரியதாகவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்