10 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற முயன்ற போது கைதான, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்கு விளக்க மறியல்

🕔 November 11, 2023

வெளிநாட்டு தரப்பு ஒன்றிடமிருந்து 10 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெறுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட – மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் சஷேந்திர பத்திரகேவை, 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மேலும் இருவருக்கும் இவ்வாறு விளகக்க மறியல் விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் சஷேந்திர பத்திரன உள்ளிட்ட மூவரை, நேற்று வெள்ளிக்கிழமை – அவரின் அலுவலகத்தில் வைத்து லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர்.

வெளிநாட்டு தரப்பினரின் வேலைகளை இலங்கையில் ஆரம்பிப்பதற்குத் தேவையான அனுமதியை வழங்குவதற்கு, அவர் லஞ்சம் கோரியுள்ளார்.

சுபுன் சஷேந்திர பத்திரகே, 2022 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டார்.

Comments