தேசிய பிரசாரப் பணிப்பாளராக இர்சாத் ஏ. காதர் நியமனம்

🕔 June 2, 2015

Irshad A. Katharகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தேசிய பிரசார பணிப்பாளராக – பிரபல ஒலி, ஒளிபரப்பாளர் இர்சாத் ஏ.காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இர்சாத் ஏ. காதர், பல்வேறு அமைப்புக்களில் முக்கிய பதவிகளையும் வகிக்கின்றார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை சம்மேளனத்தின் தேசியத் தலைவர் எம்.ஐ. உதுமாலெவ்வை  கொழும்பு நிரோமியிலுள்ள சம்மேளனத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் சம்மேளனத்தின் ஆலோசகரும், முன்னாள் தலைவரும், முன்னாள் வீடமைப்பு அமைச்சருமான இம்தீயாஸ் பாக்கீர் மாக்கார், சம்மேளனத்தின் செயலாளர் அஜ்வதீன், நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன், சமூக சேவையாளர் ஏ.எம்.சரூக் உட்பட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் ஆலோசகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்