‘எம்ஒபி’ உரத்தின் விலை அரைவாசியாகக் குறைக்கப்படுகிறது: விவசாய அமைச்சர்

🕔 November 6, 2023

ம்ஒபி (MoP) உரத்தின் விலையை மேலும் 50 வீதத்தால் குறைக்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வலஸ்முல்ல ஒமர கிராமத்தை இரண்டாம் கட்ட விவசாய வணிக கிராமமாக அபிவிருத்தி செய்யும் பணியை நேற்று (05) ஆரம்பித்து வைத்த போது அவர் இதனைக் கூறினார்.

அமைச்சரவை பத்திரத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கீகாரம் வழங்குவார் எனவும் விவசாய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது பொதுத்துறை உர நிறுவனங்களில் 28,600 மெட்ரிக் டொன் எம்ஒபி உரம் – கையிருப்பில் உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எம்ஒபி உரத்தின் விலையை 50 வீதத்தால் குறைக்க முடியும் என அரசாங்கத்துக்குச் சொந்தமான உர நிறுவனத்தின் தலைவர் டொக்டர் ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஒரு அந்தர் (50 கிலோ கிராம்) எம்ஒபி மூட்டையொன்று 15 ஆயிரம் ரூபாவுக்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்