05 ஆயிரம் அதிபர்களுக்கு அடுத்த மாதம் நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்: கல்வி ராஜாங்க அமைச்சர்

🕔 October 22, 2023

திபர் சேவையின் மூன்று தரங்களுக்குமான சுமார் 5,000 பாடசாலை அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படவுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாகவும் கல்வி ராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“மூன்று தரங்களுக்கும் சுமார் 5,000 பாடசாலை அதிபர்கள் நியமிக்கப்படுவார்கள். 04 நவம்பர் 2024 அன்று உரிய நியமனக் கடிதங்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்”.

“வரவிருக்கும் வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என நான் நம்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்