வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் ராஜாங்க அமைச்சர் டயான கமகே முறைப்பாடு: வைத்தியசாலை சென்றும் திரும்பினார்

🕔 October 21, 2023

க்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா – தன்னைத் தாக்கியதாக, ராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்றிரவு ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்குச் சென்றிருந்த அவர், ‘கழுத்து பட்டை’ (neck collar) அணிந்தவாறு வெளியேறியிருந்தார்.

நேற்று பகால் நாடாளுமன்றில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தன்னை ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி சுஜித் பெரேரா தாக்கியதாக கூறியதோடு, அது தொடர்பில் விசாரணை நடத்துமாறும் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க, நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க, நாடாளுமன்ற கட்டடத்தினுள் – ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் கடுமையான வாக்குவாதத்தல் ஈடுபட்டு, அவர்களை தாக்குவதற்குச் செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோகள் – சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டாரவுடன் தான் வந்தபோது – டயானா கமகே தன்னைத் தாக்க முயற்சித்ததாகவும், தற்பாதுகாப்பின் பொருட்டே தன்னுடைய நடத்தை அமைந்ததாகவும், அந்த இடத்திலுள்ள சிசிரிவி கமராக்களை ஆராயும் போது உண்மை வெளிவரும் எனவும் சுஜித் பெரேரா எம்.பி தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்