இஸ்ரேலுக்கான பைடனின் ‘குடுட்டு ஆதரவுக்கு’ எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் – ராணுவ விவகார பணிப்பாளர் ராஜிநாமா

🕔 October 19, 2023
ஜோஷ் போல்

மாஸுடனான போரில் – இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைத் தொடர்ந்து அனுப்பும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் – ராணுவ விவகாரங்களுக்கான காங்கிரஸ் மற்றும் பொது விவகார பணிப்பாளராகக் கடமையாற்றிய ஜோஷ் போல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என, த நிவ்யோக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

11 ஆண்டுகளுக்கும் மேலாக குறித்த பணியில் இருந்தவந்த ஜோஷ் போல், அமெரிக்க ஜனாதிபதி நிர்வாகத்தின் ‘ஒரு பக்கத்துக்கான குருட்டு ஆதரவு’ கொள்கை முடிவானது – குறுகிய பார்வை, அழிவுகரமான, நியாயமற்ற மற்றும் நாங்கள் பகிரங்கமாக ஆதரிக்கும் மதிப்புகளுக்கு முரணானவை என, ஜோஷ் போல் தனது ராஜநாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

“இஸ்ரேலின் பதிலடியும் அதற்கான அமெரிக்க ஆதரவும் – இஸ்ரேலிய மற்றும் பலஸ்தீனிய மக்களுக்கு மேலும் மேலும் ஆழமான துன்பங்களுக்கு வழிவகுக்கும்” என்றும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கடந்த தசாப்தங்களில் நாங்கள் செய்த அதே தவறுகளை – மீண்டும் செய்கிறோம் என்று நான் அஞ்சுகிறேன். மேலும் நீண்ட காலத்துக்கு அதில் ஒரு பகுதியாக நான் இருக்க விரும்பவில்லை” எனவும் ஜோஷ் போல் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்