பாடசாலை உணவுத் திட்டம் அடுத்த ஆண்டுக்கும் நீடிக்கப்படும்: கல்வியமைச்சர்

🕔 October 19, 2023

நாடு முழுவதிலும் உள்ள ஆரம்பப் பாடசாலைகளில் பயிலும் 1.6 மில்லியன் மாணவர்களை உள்ளடக்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள ‘பாடசாலை உணவுத் திட்டம்’ 2024 ஆம் ஆண்டுக்கும் நீடிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெற்ற ‘பாடசாலை உணவுத் திட்டத்தின்’ முதலாவது உலகளாவிய உச்சி மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவிக்கையில்; 2030 ஆம் ஆண்டளவில், நாட்டில் உள்ள அனைத்து 4.1 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச பாடசாலை மதிய உணவு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும். இதற்கான வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீடு 204 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்தப்படும்” என்றார்.

அதன்படி, அரச பாடசாலைகளில் மாணவர்களின் ஊட்டச்சத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட நிதியமொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான வர்த்தமானி – சட்ட வரைவாளரால் தற்போது வரையப்படுவதாகவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்