முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஸியோனிஸவாதிகளை எதிர்க்க ஆயத்தமாக வேண்டும்: பலஸ்தீன தூதுவரிடம் றிசாட் பதியுதீன் தெரிவிப்பு

🕔 October 19, 2023

ல்லை மீறிய இஸ்ரேலின் எதேச்சாதிகாரப் போக்குகளால், காஸாவில் ஏற்பட்டுள்ள அவலங்கள் குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவரடம் தனது ஆழ்ந்த கவலையையும் இதன்போது அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், இலங்கையில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தில், தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம்.எச்.டார் செயிட் -ஐ இன்று (19) சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது எல்லை மீறிய இஸ்ரேலின் எதேச்சாதிகாரப் போக்குகளால், காஸாவில் ஏற்பட்டுள்ள அவலங்கள் குறித்து, தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய அவர், பலஸ்தீன மக்களுக்காக பிரார்த்திப்பதாக கூறினார்.

மேலும் போர் விதிகளை மீறி இஸ்ரேல் கட்டவிழ்த்துள்ள வான் தாக்குதல்களை கண்டிப்பதுடன், முஸ்லிம் உலகம் ஒன்றுபட்டு ஸியோனிஸவாதிகளை எதிர்க்க ஆயத்தமாக வேண்டும் என்றும் பலஸ்தீனத் தூதுவரிடம் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இதேவேளை உயிரிழந்வர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் குற்றுயிராகக் கதறும் சகோதரர்களுக்காகப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌசி மற்றும் ஏ.எச்.எம். ஹலீம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்