பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்; நாடாளுமன்றில் முன்வைக்கப்படாது: சபாநாயகர் அறிவிப்பு

🕔 October 18, 2023

யங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (18) நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.

குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக கடந்த 03 ஆம் திகதி வெளியான நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், அந்த விடயம் ஒழுங்கு புத்தகத்தில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்திய உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையிலும், இந்தச் சட்ட மூலத்துக்கு எதிராக நாட்டிலும் சர்வதேசத்திலும் எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையிலும் – சபாநாயகரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்