ராகம பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 06 குழந்தைகள்

🕔 October 17, 2023

ராகமயைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு – ஒரே பிரசவத்தில் 06 குழந்தைகள் கிடைத்துள்ளன.

கொழும்பிலுள்ள வைத்தியசாலையொன்றில் இன்று காலை (17) இவர் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.

06 குழந்தைகளும் ஆண்கள் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் கடைசியாக 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒரே பிரசவத்தில் 06 குழந்தைகள் கிடைத்திருந்தன. அவற்றில் மூன்று ஆண், மூன்று பெண் குழந்தைகளும் இருந்தன

Comments

புதிது பேஸ்புக் பக்கம்