காஸாவிலுள்ள ஐ.நா அகதி முகாமில் இஸ்ரேல் தாக்குதல்: மூன்று குழந்தைகள் உட்பட நால்வர் பலி

🕔 October 16, 2023
தெற்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் – கட்டிடங்களுக்கு மேல் நெருப்புக் கோளம் எழுகிறது

த்திய காஸாவில் உள்ள ஐ.நா. அகதிகள் முகாம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

அல் நூர் வானொலியின் கூற்றுப்படி, நுசிராத் முகாமில் அமைந்துள்ள ஃபராஜ் குடும்பத்தின் வீட்டின் மீது குண்டு வீசப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலிய வான் தாக்குதலில் முஹம்மது அல்-நஜ்ஜார் எனும் காஸா அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டடுள்ளதாக பாலஸ்தீன பிரதேசத்தின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. அவரின் குடும்பத்தில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

முஹம்மது அல்-நஜ்ஜார், ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய அரசாங்கம் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களை ஆவணப்படுத்துதல் மற்றும் வழக்குத் தொடர்வதற்கான தேசிய அதிகார சபையின் பணிப்பாளர்கள் குழுவின் உறுப்பினராவார்.

காஸாவின் வடக்குப் பகுதியிலிருந்து தென் காஸா பகுதியிக்கு பலஸ்தீன் மக்களை இடம்பெயர்ந்து செல்லுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், தென் காஸா பகுதியிலும் வான் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்