மான் இறைச்சிக் கறி சமைத்தவருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம்

🕔 October 10, 2023

மான் இறைச்சிக் கறி சமைத்துக் கொண்டிருந்த 17 வயதுடைய சிறுமி ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விலானகம பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அலவத்துகொட பொலிஸார் – குறித்த சிறுமியைக் கைது செய்தனர்.

இதனையடுத்து கண்டி மேலதி நீதவான் முன்னிலையில் இவர் ஆஜர் செய்யப்பட்ட போது, அவருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும் மான் கறியை அழிக்குமாறும் இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.

வீடொன்றுக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மான் ஒன்று கொல்லப்பட்டுள்ளதாகவும், அந்த வீட்டில் மான் இறைச்சி மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில் பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

பொலிசார் சோதனை மேற்கொண்ட போது – சந்தேக நபர் மான் கறி சமைத்துக் கொண்டிருந்தபோது பிடிபட்டார்.

ஆனால், மீதமுள்ள மான் இறைச்சியை மீட்க முடியவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்