பயணிகள் பஸ் மீது பாரிய மரம் வீழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு: கொழும்பில் சோகம்

🕔 October 6, 2023

யணிகள் பஸ் ஒன்றின் மீது கொழும்பு – கொள்ளுபிட்டி டுப்ளிகேசன் வீதியில் இன்று (06) பாரிய மரம் ஒன்று வீழ்ந்ததில் 05 பேர் உயிரிழந்தனர்.

கொழும்பிலிருந்து தெனியாய இவ்வாறு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து அதிகார சபைக்குத் சொந்தமான இந்த பஸ், வழமையாக இந்த பாதை ஊடாக பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்