அவுஸ்ரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வேன்: நாடு திரும்பிய தனுஷ்க குணதிலக தெரிவிப்பு
அவுஸ்ரேலியாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, தனது வழக்கு தொடர்பில் அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக சிவில் வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (03) இலங்கை வந்தடைந்த கிரிக்கெட் வீரர், சிட்னியில் 11 மாத கால விசாரணையை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் உள்ள சட்டங்களின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணிடம் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இருந்தபோதிலும் அவுஸ்ரேலிய அரசுக்கு எதிராக ஒரு சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்றும், அதன் மூலம் அவர் தனது விசாரணையின் போது தனது வழக்குச் செலவுக்கு இழப்பீடு கோர முடியும் ன்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவுஸ்ரேலிய அரசுக்கு எதிராக விரைவில் சிவில் வழக்கை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக தனுஷ்க குணதிலக கூறியுள்ளார்.
ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பையைத் தவறவிட்டமைக்கு வருத்தம் தெரிவித்த தனுஷ்க, கிரிக்கெட் விளையாட்டிற்கு இன்னும் அதிகம் அர்ப்பணிப்புச் செய்ய வேண்டியிருப்பதாகவும், விரைவில் பயிற்சியில் ஈடுபட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்பான செய்தி: பாலியல் பலாத்கார குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்க விடுதலை: நீதிமன்றுக்கு வெளியில் அவர் கூறியது என்ன?