பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் விபத்து: ஏறாவூர் – மீராகேணி நபர் ஸ்தலத்தில் மரணம்

🕔 October 3, 2023

– உமர் அறபாத் –

றாவூர் மிச்நகர் பிரதான வீதி புகையிரத கடவையில் இன்று (03) முற்பகல் வேளையில், மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பயணித்த புகையிரத்தில் முச்சக்கரவண்டி மோதுண்டதில் நபர் ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமானார்.

ஏறாவூர் – மீராகேணியை வதிவிடமாக கொண்ட 38 வயதுடைய அப்துல் றகுமான் முகம்மது றமீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இக்கடவை பாதுகாப்பற்ற நிலையில் பல மாதங்களாக இருந்த நிலையில், இந்த விபத்து இன்று ஏற்பட்டது.

இதனையடுத்து இவருடைய மரணம் போன்று மற்றுமொரு உயிர் போய்விடக்கூடாது என்ற அடிப்படையில், “பாதுகாப்பான புகையிரத கடவை வேண்டும், உரிய அதிகாரிகள் தீர்வினை பெற்றுத்தாருங்கள்” எனக் கோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

சடலம் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்