ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

🕔 October 3, 2023

லகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க நேற்று (02) அறிவித்தல் பிறப்பித்துள்ளார்.

பம்பலப்பிட்டியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் உரிமை தொடர்பான சர்ச்சை குறித்து – உண்மைகளை தெரிவிப்பதற்காக அவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட முறைப்பாடு ஒன்றை பரிசீலித்த நீதவான் – பிரதிவாதிகளான ஞானசார தேரர், தயாசீல தேரர் மற்றும் அடுக்குமாடி கட்டிடத்தின் குழுத் தலைவர் சில்வெஸ்டர் ஆகியோருக்கு அழைப்பு அனுப்புமாறு உத்தவிட்டுள்ளார்.

சட்டத்தரணி சந்தியா தல்துவ – நீதிமன்றில் இந்த தனிப்பட்ட முறைப்பாட்டை தனது தரப்பு சார்பில் தாக்கல் செய்ததையடுத்து, அவர் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பம்பலப்பிட்டியில் வசிக்கும் இனோகா சந்திம சேனாநாயக்க என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அமெரிக்காவில் வசிக்கும் தனது அத்தை – சட்டப்பூர்வமாக தனக்கு வழங்கிய இந்த சொத்துக்குள் நுழைவதை எதிர்மனுதாரர்கள் தடுத்ததாக மனுதாரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சொத்துக்களை விற்று அதில் கிடைக்கும் தொகையைதூபி ஒன்றை நிர்மாணிப்பதற்கு பயன்படுத்துமாறு சொத்தின் உரிமையாளர்கள் தமக்குக் கூறியதாக ஞானசார தேரர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்