தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

🕔 October 3, 2023

தரம் ஐந்து – புலமைப்பரிசில் பரீட்சை  நடைபெறவுள்ள திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15 ஆம் திகதி நடத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாடளாவிய ரீதியில் 2888 நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

ஒரு மணித்தியாலத்தைக் கொண்ட வினாப்பத்திரம் – I மற்றும் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களையும் கொண்ட வினாப்பத்திரம் – II என, இரண்டு வினாப்பத்திரங்கள் இந்தப் பரீட்சையின் போது வழங்கப்படும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்