நாமலின் திருமண நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணத்தை, ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த செலுத்தினார்

🕔 October 2, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்று நிகழ்வுக்கான 2.6 மில்லியன் ரூபா மின்சார கட்டணத்தை – தான் செலுத்தியதாக ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டணத்துக்கு நாமல் ராஜபக்ஷ பொறுப்புதாரி இல்லை என்ற போதிலும், அந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட மிக முக்கிய பிரமுகர்களுக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு வழங்கும் பொருட்டு இந்தச் செலவு ஏற்பட்டதால், பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு, மேற்படி கடட்ணத்தை தான் செலுத்தியதாக ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாத்து அதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் – இந்த கட்டணத்தை செலுத்தும் தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த செலவை ஈடுகட்ட தனது தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தியதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்