அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

🕔 October 2, 2023

வசரகால மருந்துக் கொள்வனவுகளை சுகாதார அமைச்சு இடைநிறுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

“அவசரகால கொள்முதலுடன் தொடர்புடைய சில பிரச்சினைகள் உள்ளன. இதன் காரணமாக இந்தச் செயல்முறை பற்றிய தவறான எண்ணங்கள் ஏற்பட்டன” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், மற்றொரு தொற்றுநோய் போன்ற ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், இந்த செயல்முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, தற்போது சுமார் 170 முதல் 200 வரையான மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments