ஜனாதிபதி தேர்லுக்காக 11 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இம்மாதம் சமர்ப்பிக்கப்படும்

🕔 October 1, 2023

னாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 11 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கான, 2024ஆம் ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு – செலவுத் திட்டம்) இந்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அரசியலமைப்புச் சட்டப்படி, அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த வகையில் ஜனாதிபதியின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்து அந்த காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார சண்டே டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் படி, அரசின் செலவினம் 3,860 பில்லியன் ரூபாவாகும். 2023 உடன் ஒப்பிடும்போது இது 203 பில்லியன் அதிகரிப்பாகும். கடந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 3,657 பில்லியன் ரூபாவாகும்.

Comments