இறக்குமதி செய்த பிஃபைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசிகளில் 87 வீதமானவை அழிப்பு: அமைச்சர் கெஹலிய தகவல்

🕔 September 25, 2023

கொரோனா நோய்த்தடுப்புக்காக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பிஃபைசர் (Pfizer) தடுப்பூசிகளில் 13 வீதமானவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை காலாவதியான திகதிக்குப் பின்னர் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருக்கும் போது – கொவிட் நோய்த்தடுப்பு ஊசி போடுவது பக்கவிளைவுகளால் பிற நோய்களை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்து, நோய்த்தடுப்பு திட்டத்தில் இருந்து மக்களைத் தூர விலக்கியதாகவும், அதன் விளைவாக ஏராளமான தடுப்பூசிகள் வீணாகிவிட்டதாகவும் அவர் கூறினார்.

“உலக சுகாதார நிறுவனத்துடன் கலந்தாலோசித்த அரசாங்கம், தடுப்பூசிகளின் காலாவதி திகதிக்கு முன், மீதமுள்ள பங்குகளை நட்பு நாடுகளுக்கு நன்கொடையாக வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தாலும், சேமிப்பு வசதிகள் இல்லாததால் அவர்கள் அதை மறுத்துவிட்டனர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

காலாவதியான தடுப்பூசிகளை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும், காலாவதியான மருந்துகளை அழிப்பது நடைமுறையில் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.அ

“அதை முற்றிலுமாகத் தடுப்பது சாத்தியமில்லை, ஆனால் அதை மிகக் குறைந்த அளவுக்குக் குறைக்க பயனுள்ள வழிமுறையை உருவாக்க வேண்டும” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்