க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்தி வைப்பு: புதிய திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

🕔 September 21, 2023

க.பொ.த உயர்தர பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) முன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

பரீட்சைக்கான புதிய திகதியினை பரீட்சைகள் திணைக்களம் அடுத்த வாரம் அறிவிக்கும் என அவர் இதன்போது கூறினார்.

ஏற்கனவே, பரீட்சை ஒத்திவைக்கபடும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தகவல் வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பான செய்தியை கடந்த 18ஆம் திகதி புதிது செய்தியாக வெளியிட்டிருந்தது.

தொடர்பான செய்தி: க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்