துப்பாக்கிச் சூட்டில் சிறுமி மரணம்: தந்தைக்கு இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிப்பு
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுமியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மருதானை – மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இன்று (17) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்தையும் மகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் தந்தை இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கடந்த வருடம் நொவம்பர் மாதம் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.