சேனல் 4 குற்றச்சாட்டு விசாரணைக்குழு தலைவர் – ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம்; யார் இவர்?: முழு விபரம் உள்ளே

🕔 September 15, 2023

– யூ.எல். மப்றூக் –

ஸ்டர் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ள விசாரணைக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் எஸ்.ஐ. இமாம் நீதித்துறையில் 33 வருடகால அனுபவத்தைக் கொண்டவராவார்.

1980ஆம் ஆண்டு நீதிமன்ற நீதவானாக தனது நீதித்துறை வாழ்க்கையை ஆரம்பித்த அவர், 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதியரசராக பணியாற்றி ஓய்வுபெற்றார்.

1974ஆம் ஆண்டு சட்டத்துறைக்குள் நுழைந்த இமாம், பின்னர் சொந்த ஊரான கண்டியில் சட்டத்தரணியாகப் பணியாற்றி வந்தார்.

2003ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் கடமையாற்றிய அவர், 2010 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதியரசாக நியமிக்கப்பட்டார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இவர் – சட்டத்துறையில் முதுகலைமாணி பட்டத்தை நிறைவுசெய்தார்.

ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம் – கண்டி திரித்துவக் கல்லூரியின் (Trinity College) பழைய மாணவராவார்.

இவரின் தாய் கண்டியைச் சேர்ந்தவர் என்பதும், தந்தை பாகிஸ்தான் நாட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: சேனல் 4 குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம் தலைமையில் குழு நியமனம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்