நாட்டில் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

🕔 September 14, 2023

ந்து வயதுக்குட்பட்ட 15,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, 2023 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகத்தால் வெளியிடப்பட்ட ‘ஊட்டச்சத்து மாதம்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் 15,763 சிறுவர்கள் கடுமையான ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இருப்பினும், இது 2022 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுடைய மொத்தக் குழந்தைகளின் எண்ணிக்கையை விடக் குறைவாகும். கடந்த வருடம் 18,420 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எடைக்குறைவு சதவீதம் 2022 இல் 15.3% ஆகவும், 2023 இல் 17.1% ஆகவும் அதிகரித்துள்ளது. நுவரெலியா மாவட்டம் 26.4% ஆக அதிக எடை குறைந்த சதவீதத்தைப் பதிவு செய்துள்ளது.

2022 போசாக்கு மாத தரவுகளுடன் ஒப்பிடும் போது, வவுனியா தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் எடைக்குறைவு சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்