கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம்: ராஜாங்க அமைச்சருக்கு பிணை

🕔 September 14, 2023

னுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில், நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பிரதான நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிவான் நாலக்க சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் இன்று (14) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், குறித்த வழக்கினை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 4ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற ராஜாங்க ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் கைதிகள் இருவரை முழங்காலில் இருக்கச்செய்துள்ளதுடன் தனது துப்பாக்கியை காண்பித்து அவர்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றது.

இதனையடுத்து சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவியை லொஹான் ரத்வத்த ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்பான செய்தி: லொஹான் ரத்வத்த தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு: கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

Comments