பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்; நான்காவது மாதமும் நீள்கிறது சிறை வாழ்க்கை

🕔 January 27, 2016

pillayan - 087கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, தொடர்ந்தும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று புதக்கிழமை உத்தரவிட்டது.

அந்தவகையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை, பிள்ளையான் விளக்க மறியிலில் வைக்கப்படவுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், கடந்த வருடம் ஒக்டோபர் 11 ஆம் திகதி கைது செய்யப்பட்ட பிள்ளையான், தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், தடுப்புக் காவலில் இருந்தவாறே நேற்று செவ்வாய்கிழமை, நீதிமன்ற அனுமதியுடன், கிழக்கு மாகாண சபை அமர்வில் பிள்ளையான் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்