இங்கிலாந்திலிருந்து காதலனைச் சந்திக்க வந்த பெண், மாடியிலிருந்து வீழ்ந்து மரணம்

🕔 September 10, 2023

பேஸ்புக் மூலம் நட்பாக பழகிய இளைஞரின் அழைப்பின் பேரில் இலங்கை வந்த இங்கிலாந்து குடியுரிமை பெற்ற 27 வயதுடைய சின்னையா அழகேஸ்வரன் ரொமினா என்பவர், கல்கிசையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (09) நடந்துள்ளது.

இது தற்கொலையா, விபத்தா அல்லது கொலையா என கண்டறிவதற்கான விசாரணைகளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெள்ளவத்தையில் வசிக்கும் 29 வயதுடைய சட்டக்கல்லூரி மாணவனான தனதுகாதலரைச் சந்திப்பதற்காக மார்ச் 8ஆம் திகதி – குறித்த பெண் இலங்கை வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் இருவரும் குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் படித்து வந்த இலங்கையர், கடந்த ஆண்டு நாட்டுக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது.

பேஸ்புக் மூலம் இருவரும் காதல் உறவை வளர்த்து வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை இங்கிலாந்து திரும்பவிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இறந்தவரின காதலனை விசாரணைக்காக பொலிஸார் காவலில் எடுத்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே மதம் தொடர்பாக சிறு வாக்குவாதம் ஏற்பட்டதாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

தான்வெள்ளிக்கிழமை மதியம் நிறைய மதுபானம்உட்கொண்டு தூங்கி விட்டதாகவும், பின்னர் தனது காதலியிடமிருந்து எந்த பதிலும் வராததால் தேடுதலின் போது அவரது உடலைக் கண்டுபிடித்ததாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

பிரேத பரிசோதனை இன்று (10) நடைபெறும் என்றும், இங்கிலாந்து தூதரகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments